

மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வர் அறிவித்த பல்வேறு திட்டப் பணிகளின் பலன் கிடைக் கும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி தேர்தல் தொடர்பாக மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய தாவது:
மதுரை மாநகருக்குப் பல் வேறு வளர்ச்சிப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி பல கோடி ரூபாயில் உட்கட்டமைப்பு வசதி, சாலைகள், பாலங்கள் எனப் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. நமது கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே அதன் முழு பயன் கிடைக்கும். 1996-2001 காலகட்டத்தில் எனது தந்தை மூலமாக மதுரை அடைந்த வளர்ச்சியைவிட அதிகப்படியான வளர்ச்சியை வரக்கூடிய காலங் களில் எட்ட வேண்டும் என்றார்.