

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட பாஜகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் தேர்தல் பணிக் குழு இரண்டாவது முறை யாக நேர்காணல் நடத்தியது.
மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் பாஜக சார்பில் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. அவர்களிடம் ஜன.27, 28-ல் மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் சரவணன், முன்னாள் மாவட் டத் தலைவர்கள் சசிராமன், ராஜ ரத்தினம், பாலகிருஷ்ணன், செல் வக்குமார் ஆகியோர் முதல் நாளில் 110 பேரிடம் நேர்காணல் நடத்தினர். சென்னையில் ஜன.28-ல் நடைபெற்ற கட்சிக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சரவணன் சென்றதால் தேர்தல் பணிக் குழுவினர் அன்று 20 பேரிடம் நேர்காணல் நடத்தினர்.
ஆனால் மாநில நிர்வாகிகள் இல்லாமல் நேர்காணல் நடத்தப் பட்டதால், அது செல்லாது என மாநில தலைமை அறிவித்தது. மாநில நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் நேர்காணல் நடத்தி தலைமைக்குப் பட்டியல் அனுப்பு மாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, மாநில பொதுச் செயலர் னிவாசன் ஆகி யோர் முன்னிலையில் 130 பேரிடமும் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு மீண்டும் நேர் காணல் நடத்தப்பட்டது. முதல் நேர்காணலில் கேட்கப்பட்ட அதே கேள்வியே இந்த நேர்காணலிலும் கேட்கப்பட்டது. இதனால் நேர் காணலுக்கு வந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து பாஜகவினர் கூறியதாவது:
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் நேர்காணலை விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காக 2 நாட்களாக விருப்ப மனு அளித்த அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. மாநில நிர்வாகிகள் இல்லாமல் நேர்காணல் நடத்தி யதால், மாவட்ட தேர்தல் பணிக் குழு நடத்திய நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில நிர் வாகிகள் முன்னிலையில் மீண்டும் நேர்காணல் நடத்தப்பட்டது என் றனர்.