

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவுகள் என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்கள் அதிகம். அவர்களின் தயக்கத்தைப் போக்கி, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) காலை இணைய வழியில் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில், ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்ட பெர்ஹாம்பூர் சப்-கலெக்டர் வெ.கீர்த்திவாசன், ஐஏஎஸ், தேனி மாவட்டம்உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி ப.கவுசல்யா, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற உள்ளனர்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00224 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளலாம்.