

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 20-வது கட்ட மெகா முகாமில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 919 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. உலகையே ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி, தமிழகம் முழுவதும் வாரந்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை 19 முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், 20-வது மெகாகரோனா தடுப்பூசி முகாம் தமிழகம்முழுவதும் 50 ஆயிரம் இடங்களில்நேற்று நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். குறிப்பிட்ட முகாம்களில் மட்டும் 15 முதல்18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப் பட்டது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதன்படி, 20-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 919 லட்சம்பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட் டது.
தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (ஞாயிறு) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், வழக்கமான தடுப்பூசி மையங்கள் இன்றுசெயல்படாது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.