கோயில் சொத்து வாடகை பாக்கி விவரங்களை பிப்.15-க்குள் ஆன்லைனில் பதிவேற்ற உத்தரவு

கோயில் சொத்து வாடகை பாக்கி விவரங்களை பிப்.15-க்குள் ஆன்லைனில் பதிவேற்ற உத்தரவு
Updated on
1 min read

கோயில் சொத்து வாடகை பாக்கிவிவரங்களை பிப். 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யஅதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்ஜெ.குமரகுருபரன் இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

‘‘சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையாசொத்துகளில் வசூல் செய்யப்படவேண்டிய நிலுவை தொகை விவரத்தை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்திட உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வழக்கு மீண்டும் விரைவில்விசாரணைக்கு வர உள்ளது. அனைத்து அறநிறுவனங்களின் கடந்த ஆண்டு அக்.31 வரையிலான கேட்பு வசூல் நிலுவை விவர அறிக்கை இந்த அலுவலகத்தில் பெறப்பட்டு தொகுக்கப்பட்ட விவரப்படி கேட்பு ரூ.2,530.60 கோடியாக உள்ளது. மேலும், இணையதள வழியில் சார்நிலை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட கேட்பு வசூல் நிலுவை விவரப்படி ரூ.2,193.29 கோடியாக உள்ளது.

எனவே, இந்த முரண்பாட்டை நேர் செய்யும் வகையில் நிலுவைவிவரங்களை பிப். 15-க்குள் பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in