தாம்பரம், ஆவடிக்கு துணை ஆணையர்கள் நியமனம் - தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தாம்பரம், ஆவடிக்கு துணை ஆணையர்கள் நியமனம் - தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated on
1 min read

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் குமார்தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், சென்னை சிபிசிஐடி எஸ்.பி. மூர்த்தி தாம்பரம் தலைமையக நிர்வாகப் பிரிவு துணை ஆணையராகவும், சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி.சுப்புலட்சுமி தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், சென்னை போக்குவரத்து (மேற்கு) துணை ஆணையர் அசோக்குமார் ஆவடி போக்குவரத்து துணைஆணையராகவும், சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி. பெருமாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும், கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் உமையாள் ஆவடி தலைமையக நிர்வாகப் பிரிவு துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பி. மகேஷ்வரன் சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாகவும், சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் தீபா டெல்லியில் உள்ளதமிழ்நாடு சிறப்பு காவல் படைகமாண்டன்ட் ஆகவும், அப்பொறுப்பில் இருந்த செந்தில்குமார் கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் ஆகவும், சென்னை மாநகர காவல் நிர்வாகப் பிரிவு துணை ஆணையர் மகேந்திரன் சென்னை அடையாறு துணை ஆணையராகவும், சென்னை போக்குவரத்து (வடக்கு)துணை ஆணையர் பிரதீப் பரங்கிமலை துணை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் அண்ணா நகர் துணை ஆணையராகவும், பரங்கிமலை துணை ஆணையர் அருண் சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன் சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் உதவி எஸ்.பி.யாக இருக்கும் ஆல்பர்ட் ஜானுக்குஎஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னை போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழகஉள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in