

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 4-ம் கட்ட வேட்பாளர்பட்டியலை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.
இதில், சென்னை மாநகராட்சியில் 7 பேர், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 30 பேர், திண்டுக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட மாநகராட்சிகள், கொடைக்கானல், தேனி அல்லிநகரம், பெரியகுளம், திருச்செங்கோடு உள்ளிட்ட நகராட்சிகளின் வார்டுகள் என மொத்தம் 150 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்சியினருக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், ‘நடக்கஉள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மக்கள் நீதி மய்யத்துக்குமாபெரும் திருப்புமுனையாக அமையும். நமது உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் உள்ளாட்சிகள், முன்மாதிரியாக நாடு முழுவதும் பேசப்படும் காலம் அருகில் வந்துவிட்டது. இமைப்பொழுதும்சோர்வடையாமல் உழையுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.