

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) தனித்து போட்டியிடுவதாக கட்சித்தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அனைத்து இடங்களிலும் தனித்துபோட்டியிட முடிவு செய்துள்ளோம். இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பெண்கள் போட்டியிட வாய்ப்பு தருவோம். இளைஞர்களுக்கும் முன்னுரிமை தரப்படும்.
கட்சிகளின் தனிப்பட்ட பலத்தை நிரூபிக்க உள்ளாட்சி தேர்தலை பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, கூட்டணி தொடர்பாக பிற கட்சிகளுடன் பேசவில்லை. ஒருசில இயக்கங்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேசி வருகின்றன.
அந்தந்த பகுதி சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வோம். எங்கள் கட்சிக்கு அமைதியான வரவேற்பு உள்ளது.மக்கள் ஒருவிதமான அரசியலுக்கு பழகிவிட்டதால் மாறுவது அவர்களுக்கு சிரமமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயசீலன், முதன்மை அமைப்புசெயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன் உடன் இருந்தனர்.