

பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி செல்லபக்தர்களுக்கு பிப்.1-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமியையொட்டி 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், தை பிரதோஷம் மற்றும் 31-ம் தேதி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் பிப்.1 முடிய சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும்வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலோ அல்லது மழை பெய்தாலோ பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. தற்போது கரோனா, ஓமைக்ரான் தொற்று பரவலால் மலையேறும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை. காலை7 மணி முதல் 10 மணி வரைமட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோயில்கள் அமைந்துள்ள மலைப் பகுதிகளில் இரவில் தங்க அனுமதி இல்லை.
இவ்வாறு வனத்துறையும், கோயில் நிர்வாகமும் அறிவித்துஉள்ளது.