Published : 30 Jan 2022 09:00 AM
Last Updated : 30 Jan 2022 09:00 AM

தளராத தன்னம்பிக்கையால் மருத்துவக் கனவை நனவாக்கிய சமத்தூர் அரசுப்பள்ளி மாணவர்

மாணவர் யுவன்ராஜ்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டி செம்பாகவுண்டர் காலனியை சேர்ந்தவர் சுனிதா, இவரது கணவர் முருகன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆடு வளர்த்தும், தென்னை நார் தொழிற்சாலையில் கூலி வேலைக்கு சென்றும் மகன்களை சுனிதா காப்பாற்றி வருகிறார்.

இவரது இரண்டாவது மகன் யுவன்ராஜ் (18) சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று, அதே ஆண்டு நீட் தேர்வு எழுதிய யுவன்ராஜ் 155 மதிப்பெண்கள் பெற்றார். கலந்தாய்வில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்ததால் பல லட்ச ரூபாய் செலவாகும் என்பதால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. இதனால் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று, கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதினார். இதில் 279 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. தந்தையை இழந்த நிலையிலும், தளராத தன்னம்பிக்கையுடன் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற யுவன்ராஜூக்கு, அப்பள்ளி ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x