

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தில் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக முனைவர் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தமிழர்களின் பெருமைமிகு பட்டியலில் இணையும் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரான முனைவர் வி.ஆனந்த நாகேஸ்வரனுக்கு தமிழர்கள் அனைவரோடும் சேர்ந்துஎனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.