ராமநாதபுரம் கூலித்தொழிலாளியின் மகள் மருத்துவம் படிக்க தேர்வு

புஷ்பகரணி
புஷ்பகரணி
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளியின் மகள் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளார்.

கடந்த செப். 12-ல் நடந்த நீட் தேர்வில் ராமநாதபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் இருந்து 52 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 40 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர விண்ணப் பித்துள்ளனர்.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து 351 மதிப்பெண்கள் பெற்ற கமுதி அருகே ராமசாமிபட்டி அரசு பள்ளி மாணவி ஜெ.புஷ்பகரணி, 2-ம் இடம் பிடித்து 321 மதிப்பெண்கள் பெற்ற ரெகுநாதபுரம் அரசு பள்ளி மாணவர் எஸ். சந்தோஷ்குமார், 3-ம் இடம் பிடித்து 285 மதிப்பெண் பெற்ற திருஉத்தரகோசமங்கை அரசு பள்ளி மாணவி ஆர்.மனிஷா ஆகியோருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

மாணவி புஷ்பகரணிக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவர் எஸ்.சந்தோஷ்குமாருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மனிஷாவுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இம்மாணவ, மாணவியரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

மாணவி புஷ்பகரணியின் தந்தை ஜோதிராஜன், கூலித் தொழிலாளி, தாய் வள்ளி. இம்மாணவியை ராமசாமிபட்டி கிராமத்தினர் வெகுவாக பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in