Published : 14 Apr 2016 09:45 AM
Last Updated : 14 Apr 2016 09:45 AM

திமுக வேட்பாளர் பட்டியலில் 25 மாவட்ட செயலாளர்களுக்கு இடம் இல்லை

திமுக வேட்பாளர் பட்டியலில் 25 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 4 மாநகர செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திமுகவின் மாவட்ட அமைப்பு கடந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட்டதில் 65 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப் பட்டன. இந்த மாவட்டங்களுக்கான செயலாளர்களில் 25 பேருக்கு தேர் தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கும்மிடிப்பூண்டி கி.வேணு (திருவள்ளூர் வடக்கு), க.தேவராஜி (வேலூர் தெற்கு), ஆர்.சிவானந்தம் (திருவண்ணாமலை வடக்கு), ஆ.அங்கையற்கண்ணி (விழுப்புரம் தெற்கு), சு.கல்யாணசுந்தரம் (தஞ்சாவூர் வடக்கு), குத்தாலம் பி.கல்யாணம் (நாகை வடக்கு), ஏ.கே.எஸ்.விஜயன் (நாகை தெற்கு), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர்), ந.தியாகராஜன் (திருச்சி வடக்கு), குன்னம் சி.ராஜேந்திரன் (பெரம்பரலூர்), நன்னியூர் ராஜேந்திரன் (கரூர்), கே.தங்கவேலு (புதுக்கோட்டை தெற்கு), செ.காந்திசெல்வன் (நாமக்கல் கிழக்கு), இ.ஜி.சுகவனம் (கிருஷ்ணகிரி கிழக்கு).

சி.ஆர்.ராமச்சந்திரன் (கோவை புறநகர் வடக்கு), எம்.வீரகோபால் (கோவை மாநகர் வடக்கு), ஆ.நாச்சிமுத்து (கோவை மாநகர் தெற்கு), இல.பத்மநாபன் (திருப்பூர் தெற்கு), வ.வேலுசாமி (மதுரை மாநகர் வடக்கு), பெ.கி.துரைராஜ் (திருநெல்வேலி மேற்கு), அப்துல் வஹாப் (திருநெல்வேலி மத்தி), கே.ராஜாராம் (தூத்துக்குடி வடக்கு), என்.பெரியசாமி (தூத்துக்குடி தெற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் மேற்கு), என்.நல்லசிவம் (ஈரோடு வடக்கு) என மொத்தம் 25 மாவட்டச் செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுமட்டுமன்றி, மு.அன்பழகன் (திருச்சி), மு.நாகராஜ் (திருப்பூர்), எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் (தூத்துக்குடி வடக்கு), மு.சுப்பிரமணியம்(ஈரோடு) ஆகிய 4 மாநகர செயலாளர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வில்லை.

முன்னாள் அமைச்சர்கள் 9 பேருக்கு சீட் இல்லை

திமுக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் 25 பேரில் 17 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, பொங்கலூர் பழனிச்சாமி, என்.செல்வராஜ், உபயதுல்லா, தமிழரசி, கே.ராமச்சந்திரன், சுப.தங்கவேலன் ஆகியோருக்கு சீட் தரவில்லை.

முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன், பேரவை துணைத்தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x