Published : 30 Jan 2022 07:31 AM
Last Updated : 30 Jan 2022 07:31 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு தேர்வான 15 மாணவர்கள்: யுடியூப் மூலம் படித்து முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்ற திமிரி மாணவி

தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வான திமிரி அரசு பள்ளி மாணவி ரஞ்சினியை, பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமாரி உள்ளிட்டோர் பாராட்டினர்.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 15 மாணவ, மாணவிகள் 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் படிக்க ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கியதால் பாதிக் கப்பட்ட கிராமப்புற ஏழை, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிக்க 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 15 மாணவ, மாணவிகள் இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேரு வதற்கு தேர்வாகியுள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் டி.டி.மோட்டூர் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் மோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், திருவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் யோசியா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரினி, நாகப் பட்டிணம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் வசந்த், காஞ்சிபுரம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியிலும், பொன்னை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிகா, ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா, தருமபுரி அரசினர் மருத்துவக் கல்லூரியிலும், பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யா, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்கதேர்வாகியுள்ளனர். ஒடுக்கத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கீதபிரியா, திருவள்ளூர் பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகி யுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த 3 பேரும், பல் மருத்துவம் படிப்பில் ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வாகினர். 2021-ம் கல்வியாண்டில் 5 பேர் மருத்துவம் படிக்கவும், 2 பேர் பல் மருத்துவம் படிக்கவும் தேர்வாகி யுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் புகழரசன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், மோசூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவி அம்பிகா, திருவண்ணாமலை அரசினர் மருத்துவக் கல்லூரியிலும், வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தமிழ்செல்வி, திருவள்ளூர் அரசினர் மருத்துவக் கல்லூரி யிலும், ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ருதி, கிருஷ்ணகிரி அரசினர் மருத்துவக் கல்லூரியிலும், திமிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ரஞ்சனி, திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகி யுள்ளனர்.

வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வசுநித்ரா, கோவை  ராம கிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியிலும், வளர்புரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திகேயன், சென்னை  வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளனர்.

யுடியூபில் படித்த மாணவி

திமிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ரஞ்சனி நீட் தேர்வில் முதல் முயற்சியில் 239 மதிப்பெண் பெற்று திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வாகியுள்ளார்.

இவரது தந்தை தயாளன் சரக்கு ஆட்டோ ஓட்டுநர். பிளஸ் 2 தேர்வில் ரஞ்சனி தமிழ் பாடத்தில் 94.23, ஆங்கிலத்தில் 89.78, இயற்பியல் 87.34, வேதியியல் 90.48, உயிரியல் 87.05, கணிதம் 85.34 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேராமல் முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்ற ரஞ்சனி, நீட் தேர்வுக்காக தனது செல்போனில் யுடியூப் தளங்களில் உள்ள இலவச வீடியோக்களை பார்த்து தேர்வு எழுதியதாக தெரிவித்தார்.

மருத்துவம் படிக்க தேர்வான மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமாரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகம், ஆசிரியர் ராஜேஷ் உள்ளிட்டோர் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x