Published : 15 Apr 2016 09:49 AM
Last Updated : 15 Apr 2016 09:49 AM

திமுக வேட்பாளர்கள் மீது அதிருப்தியாளர்கள் தாக்குதல்: ‘சீட்’ கிடைக்காததால் ஆத்திரம் - முன்னாள் எம்பியின் சட்டை கிழிப்பு

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் மீது திமுக ஒன்றியச் செயலாளரின் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் மீது தண்ணீர் பாக்கெட்களை வீசினர். முன்னாள் எம்பியின் சட்டை கிழிக்கப்பட்டது. வேட்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை, போலீ ஸார் பாதுகாப்புடன் மீட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் பெயர் அறிவிக்கப்பட்டது.

அவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அணைக்கட்டு ஒன்றியச் செய லாளர் மு.பாபுவின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், பாபுவின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்தில் நேற்று குவிந்தனர். அவர்கள் அணைக் கட்டு வேட்பாளர் நந்தகுமாருக்கு எதிராக கோஷமிட்டனர். அங்கி ருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததுடன் நந்தகுமாரின் போஸ்டரையும் கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், ஏ.பி.நந்த குமார் தனது ஆதரவாளர்களுடன் மத்திய மாவட்ட அலுவலகத் துக்கு வந்தார். பாபுவின் ஆதர வாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். திடீரென சிலர் நந்த குமாரை தாக்கினர். அவருடன் இருந்த மாவட்ட அவைத் தலை வரும் முன்னாள் எம்பியுமான முகமது சகியின் சட்டையை சிலர் கிழித்தனர்.

அதிர்ச்சியில் நிலைகுலைந்த அவர்கள், தங்களது ஆதரவாளர் களுடன் அருகில் இருந்த அறைக் குள் சென்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பன் னீர்செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு காரில் புறப்பட்டனர். அப்போது சிலர், நந்தகுமாரை மீண்டும் தாக்க முயன்றனர்.

ஆனால், அவரது ஆதர வாளர்கள் அவர்களை பாதுகாப் பாக காரில் ஏற்றி அனுப்பினர். அதேநேரம், கூட்டத்தில் இருந்து வெளியேறிய வேலூர் தொகுதி வேட்பாளர் ப.கார்த்தி கேயன் மீது ஒரு தரப்பினர் குடிநீர் பாக்கெட்களை வீசி தாக்கி னர். இதுகுறித்து, பாபுவின் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர் பாபு கட்சிக்காக 15 ஆண்டுகளாக பாடுபட்டுள்ளார். அவரால்தான் அணைக்கட்டில் கட்சி வளர்ந்தது. அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் எங்கி ருந்தோ வந்து அணைக்கட்டில் நந்தகுமார் போட்டியிடுவதை ஏற்க மாட்டோம். நந்தகுமாரை மாற்றாவிட்டால் அவர் தொகுதிக்குள் நுழைந்து ஓட்டு கேட்க முடியாது’’ என்றனர்.

இந்த பிரச்சினை குறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனிடம் கேட்டபோது, ‘‘வாய்ப்பு கிடைக்காதவர்கள் சில நேரத்தில் பிரச்சினை செய்வது சகஜம். இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்வோம்’’ என்றார்.

பாளையங்கோட்டையிலும்..

பாளையங்கோட்டை தொகுதியில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய எம்.எல்.ஏ. மைதீன்கானுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை மார்க் கெட் மைதானத்தில் திமுகவினர் சிலர் மைதீன்கான் உருவபொம் மையை எரித்தனர். நேற்று காலை வேட்பாளரை மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் பகுதியில் திரண்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x