Published : 17 Apr 2016 11:42 AM
Last Updated : 17 Apr 2016 11:42 AM

25% காலியாக செல்லும் சுவிதா ரயில்கள்: கோடை விடுமுறையில் வசூலிக்க தயாராகும் ரயில்வே துறை

பண்டிகை மற்றும் விடுமுறை நாட் களில் இயக்கப்பட்டு வரும் சுவிதா சிறப்பு ரயில்களில் 25 சதவீதம் இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் கோடை விடுமுறை நெருங்குவதால் முழு அளவில் டிக்கெட் முன்பதிவு நடக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சுவிதா சிறப்பு ரயில் கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயிலில், பயணிகளின் தேவையை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு 20 சதவீத டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக் கப்படுகிறது. இந்நிலையில் இந்த ரயில்கள் தற்போது 25 சதவீதம் காலி இடங்களுடன் இயக்கப் படுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மக்களின் தேவையை அடிப்படையாக கொண்டு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன. கடந்த 3 மாதங்களாக இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், சுமார் 25 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. தற்போது, கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால், வழக்கமான விரைவு ரயில்களிலும், சுவிதா போன்ற சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’என்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தின் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, “போட்டியாளர் களை சமாளிக்கும் வகையில் விமான நிறுவனங்கள் 6 மாதங்கள் அல்லது 3 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்வோ ருக்கு கட்டண சலுகையை வழங்கி வருகிறது. ஆனால், ரயில்வே துறையில் போட்டியாளர்கள் இல்லாத சூழலில் இந்த கட்டண முறையை புகுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரயில்வே நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவில்லை, ரயில்சேவையையும் மேம்படுத் தாத நிலையில், சுவிதா போன்ற சிறப்பு ரயில்களில் கட்டணத்தை மட்டுமே பல மடங்கு உயர்த்தி ரயில்கள் இயக்குவது எந்த விதத்தில் நியாயம்?’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x