Published : 29 Jan 2022 08:15 AM
Last Updated : 29 Jan 2022 08:15 AM

கிராமங்களில் அதிவேக இணைய இணைப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கை வெளியீடு

சென்னை: கிராமங்களில் கைபேசி சேவையை அதிகரிக்கவும், அதிவேக இணையவசதிகளை அளிக்கவும் புதிதாக தமிழ்நாடு தொலைத் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.

கிராமங்களில் இணைதயள வசதியை அளிக்கும் வகையில் பாரத்நெட், தமிழ்நெட் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கிராமங்களில் தடையில்லா கைபேசி சேவையைஅதிகரிக்கும் வகையிலும், அதிவேக இணையதள வசதியை அளிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் உயர்தர தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதிகளை அளிக்கும் வகையிலும் தமிழக அரசு, ‘தமிழ்நாடு தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கை’யை உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணையை தகவல் தொடர்புத்துறை செயலர் நீரஜ் மிட்டல்நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்த கொள்கையில், தொலைத் தொடர்பு வசதி தொடர்பான பல்வேறு கட்டணங்கள், விண்ணப்பம் மற்றும் அனுமதி அளிக்கும் முறை, குறைதீர்க்கும் வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, வலுவான மற்றும்பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்ற தொலைத் தொடர்பு தளங்களை ஏற்பது இந்த கொள்கையின் நோக்கமாகும். RoW எனப்படும் ரைட் ஆப் வே அனுமதி வழங்குவதற்கு புதிய கட்டணங்களை அரசு அறிவித்துள்ளது.

தரைக்கு கீழ் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்க அனுமதி கோரும் விண்ணப்பத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1,000 என்ற திரும்பப் பெற முடியாத கட்டணம் அல்லது அதன் ஒரு பகுதியை வரியாக செலுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கைபேசிக்கான கோபுரங்கள் நிறுவுவதற்கான விண்ணப்பத்துக்கு, ஒருமுறை திரும்பப் பெறாத கட்டணமாக ஒரு கோபுரத்துக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்ற தொலைத் தொடர்பு தளங்களை ஏற்பது இந்த கொள்கையின் நோக்கமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x