Published : 29 Jan 2022 08:06 AM
Last Updated : 29 Jan 2022 08:06 AM
சென்னை: சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர், கட்சிப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.பி.சங்கர். திருவொற்றியூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் சில நாட்களுக்கு முன்பு கே.பி.சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மாநகராட்சி பொறியாளரை கே.பி.சங்கர் தாக்கியதாகவும் தெரிகிறது. இத்தகவல் வெளியான நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘திருவொற்றியூர் எம்எல்ஏ, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்த கே.பி.சங்கர், மாநகராட்சி பொறியாளரை தான் தாக்கவில்லை என்றும், தனது உதவியாளருக்கும், மாநகராட்சி பொறியாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது உதவியாளர்கள் அவரைதாக்கியதாகவும், தான் அந்த இடத்திலேயே இல்லை என்றும் விளக்கம் அளித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT