

புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புதிய மடிக்கணினி, பர்னிச்சர், ஐபோன் ஆகியவற்றை தரும் திட்டத்தை புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இதற்கான திட்ட மதிப்பு ரூ. 2.5 கோடி ஆகும்.
புதுச்சேரியில் 30 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் என மொத்தம் 33 பேர் உள்ளனர். இந்த 33 பேருக்கும் சட்டப்பேரவை அலுவலகங்கள் உள்ளன.
இவர்களுக்கு ஆப்பிள் மடிக்கணினி, ஆப்பிள் கணினி, ஆப்பிள் கைப்பேசி, போட்டோ காப்பியர், பிரிண்டர், மேஜை நாற்காலி, ஷோபா செட், அலமாரி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் அமர மேஜை, நாற்காலி மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போன்ற உபகரணங்கள் ரூ.2.5 கோடி செலவில் சட்டமன்ற செயலகத்தால் வாங்கப்பட்டன. அவைகளை உறுப்பினர் களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவைத்தலைவர் செல்வம் முன்னி லையில் இதனை எம்எல்ஏக்களுக்கு வழங்கி நிகழ்வை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, அரசுக் கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாசிம், கல்யாணசுந்தரம், விவிலியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.