புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் முடிவு: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் முடிவு: ஆளுநர் தமிழிசை
Updated on
1 min read

புதுச்சேரி: "தமிழகத்தைப் போன்றே புதுச்சேரி, காரைக்காலிலும் விரைவில் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் விழா காராமணிக்குப்பம் முருகன் கோயிலில் இன்று (28.01.2022) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பயனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியது:

"கரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஊரடங்கு இல்லாமலும், பெருமளவு பாதிப்பு இல்லாமலும், மக்கள் உணர்வு பாதிக்கப்படாமலும் எச்சரிக்கையுடன் புதுச்சேரியில் செயல்பட்டோம். இதை பலர் விமர்சித்தனர். கரோனா நான்காவது அலை வரலாம். இனி கரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

கரோனாவிலிருந்து காக்க தடுப்பூசியேத் தீர்வு. தற்போது குழந்தைகளுக்காக ஹைதராபாத் பயோடெக் நிறுவனம் கரோனாவிலிருந்து மீள சொட்டு மருந்து தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. தமிழக பாடத்திட்டம் புதுச்சேரி, காரைக்காலில் பின்பற்றப்படுகிறது. இதனால் முதல்வர், கல்வியமைச்சருடன் கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி பற்றி முடிவு எடுக்கப்படும். 15 வயது முதல் சிறார்களுக்கான தடுப்பூசி பெரும்பாலானவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்" என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in