

மக்கள் தேமுதிகவினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி தயாராக இருக்கிறார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அப்போது அவர் "மக்கள் தேமுதிகவினருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர்களை சந்திக்க திமுக தலைவர் கருணாநிதி தயாராக இருக்கிறார்.
விஜயகாந்துக்கு நான் எதிரி இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
தேர்தல் அறிக்கைகளைப் பொருத்தவரை கருணாநிதி செய்வதைத்தான் சொல்வார். எனவே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
தேர்தல் அறிக்கையை காப்பியடித்துவிட்டதாக பாமக தலைவர் ராமதாஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு வழக்கமானதே" என்றார்.
முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற புதிய அமைப்பை வி.சி.சந்திரகுமார் தொடங்கினார். திமுக அழைத்தால் கூட்டணி அமைப்போம் என்று அவர் கூறியிருந்தார்.