Published : 28 Jan 2022 07:47 AM
Last Updated : 28 Jan 2022 07:47 AM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக திமுக மாவட்டச் செயலர்கள்,எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘திமுகஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நற்பெயரை சரியாகப் பயன்படுத்தி, வெற்றியை அறுவடை செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் செயல்படுத்த முடியும்.எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகள் அனைத்தையும் திமுக முழுமையாக கைப்பற்ற, அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
மேலும், ‘‘ஒவ்வொரு பகுதி, வார்டுக்கும் பிரச்சினைகள் வேறுபடும். அவற்றைக் கண்டறிந்து, பகுதி சார்ந்த வாக்குறுதிகளை வழங்கி, மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும்’’ என்றும் கூறி, கூட்டத்தில் பங்கேற்றவர்களை முதல்வர் உற்சாகப்படுத்தினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT