

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சி உளுந்தூர் பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று மாலை சந்தித்தார்.
அப்போது தொகுதி ஒதுக்கீடு நடைபெற்றது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ''மனிதநேய மக்கள் கட்சி உளுந்தூர் பேட்டை, ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மமக செயற்குழு வரும் 12-ம் தேதி கூடுகிறது. அதில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்'' என்றார்.