Published : 19 Apr 2016 07:39 AM
Last Updated : 19 Apr 2016 07:39 AM

வேட்பாளர்கள் மனுத்தாக்கலின் போது தவறான தகவல் தந்தால் 6 மாதம் சிறை: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை

வேட்பு மனுத்தாக்கலின் போது, வேட்பாளர்கள் தரும் தகவல்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்படும். தவறான தகவல் அளித்தால், சட்டப்படி 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 28 நாட்களே உள்ளன. வேட்பு மனுத்தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தற்போது, தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

மனுத்தாக்கல் முதல் நாளான 22-ம் தேதியே சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிக்கை வெளி யாகிறது. அப்போது முதல், தமிழக அரசின் கட்டுப்பாடு முழுமையாக தேர்தல் ஆணையத்தின் கீழ் வந்துவிடும்.

தேர்தல் நடத்தும் அதிகாரி களிடம் (ஆர்.ஓ.) வேட்பு மனுக் களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அவர்களுக்கான அலு வலகங்கள் தொகுதிக்குள்ளேயே இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும்போது அளிக்கும் தகவல்கள், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் உடனடி யாக சரிபார்க்கப்படும். தவறான விவரங்கள் அளிக்கப்பட்டி ருந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு ‘125 ஏ’-ன் படி, வழக்குப்பதிவு செய்யப்படும். இதில், 6 மாதங்கள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப் புள்ளது. எனவே, வேட்பாளர்கள் சரியான தகவல்களையே அளிக்க வேண்டும்.

பார்வையாளர்கள் வருகை

தேர்தல் செலவினம் தொடர் பான பார்வையாளர்கள் 12 பேர் 19-ம் தேதி (இன்று) தமிழகம் வருகின்றனர். இவர்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம் என 4 மண்டலங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகின்றனர். இவர் களில் 9 பேர் வருமான வரித்துறை அதிகாரிகள். 2 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள், ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி.

இது தவிர, தொகுதி தோறும் நியமிக்கப்படும் செலவின பார்வை யாளர்கள் 234 பேர், பறக்கும் படை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் 118 பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் பொதுப் பார்வையாளர்களுக்கு டெல்லியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களும் விரைவில் தமிழகம் வருகின்றனர்.

விளம்பரங்களுக்கு தடை

ரேடியோ, டிவி, சமூக வலை தளங்களில் விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் அனுப்புதல் போன்றவை இந்த தேர்தலில் அதிகரித்துள்ளது. மே 14-ம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 16-ம் தேதி மாலை 6 மணி வரை, இந்த விளம்பரங்கள், மொத்தமாக அனுப்பப்படும் ‘பல்க்’ குறுஞ்செய்திகள், வாட்ஸ்-அப் மூலம் ஓட்டு கேட்பது போன் றவற்றுக்கும், ரேடியோ, டிவிகளில் செய்யப்படும் விளம்பரங்களுக் கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

‘பூத் ஏஜென்ட்களுக்கு தடை’

தமிழகத்தில் தற்போது 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. கூடுதலாக இதுவரை 380 வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு நாளன்று, மாலை 3 மணிக்கு மேல், வாக்குப்பதிவு முடியும் வரை அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்குச்சாவடியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் மாற்று முகவரை அமர்த்திவிட்டு செல்லவும் அனுமதிப்பதில்லை என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த தேர்தல் முதல், இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x