

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கள் திறப்பு தொடர்பாக ஆலோசனை ஏதும் இதுவரை புதுச்சேரியில் கல்வித்துறையில் துறை அமைச் சரால் நடத்தப்படவில்லை.
புதுச்சேரியில் கரோனா பர வலை தடுக்கும் விதமாக இரு ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதையடுத்து டிசம்பரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பின்னர் ஒமைக்ரான் மற்றும் கரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டன.
தற்போது கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளைத் தொடங்க அனுமதி கேட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழகத்தில் கல்வியமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனையை நேற்று நடத்தினார்.
பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவுஎடுத்து, மே மாதத்தில் தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டம் பின்பற்றப் படுவதால் முதற்கட்டமாக பிப்ரவரி யில் 10,11, 12-ம் வகுப்புகள் திறக்கப்படுமா என்று கல்வித்துறை தரப்பில் விசாரித்தபோது, "பள்ளி கள் திறப்பு தொடர்பாக கூட்டம் ஏதும் நடத்தப்படவில்லை. கல்வி யமைச்சர் நமச்சிவாயம் இதுவரை அதிகாரிகளுடன் கூட்டம் இதுபற்றி நடத்தவில்லை. அவர் கூட்டம் நடத்திய பிறகுதான் முடிவுகள் தெரிவிக்கப்படும்" என்று குறிப்பி டுகின்றனர்.
தமிழகத்தைப் போன்று புதுச் சேரியில் கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் ஏதும் இல்லை. அத்துடன் பொதுத்தேர்வு எழுத உள்ள வகுப்புகளுக்குஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளதால் அரசு பள்ளி மாணவ, மாண விகளும், அவர்களின் பெற்றோரும் இம்முறை பொதுத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கலக்கத்தில் உள்ளதாக பலரும் அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். நெடுந்தொலைவில் இருந்து வருவோருக்கு அரசு பஸ்களையும் இதுவரை இயக்கவில்லை.
அரசு பள்ளி குழந்தைகளின் பல கோரிக்கைகளுக்கு இதுவரைகல்வித்துறை எவ்வித நடவடிக் கையும் இதற்கு எடுக்கவில்லை என்ற புகாரும் நிலவுகிறது.