Published : 24 Apr 2016 10:01 AM
Last Updated : 24 Apr 2016 10:01 AM

வெள்ள நிவாரணப் பணிகளை முன்னிறுத்தி திரு.வி.க. நகர் தொகுதியில் களைகட்டும் பிரச்சாரம்

சென்னை திரு.வி.க. நகர் (தனி) தொகுதியில், வெள்ள பாதிப்பின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை முன்னிறுத்தி அனைத்து கட்சி வேட்பாளர் களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சென்னை திரு.வி.க. நகர் (தனி) தொகுதியில் பெரும்பான்மையாக ஆதிதிராவிடர்கள், குறிப்பிடத்தக்க அளவில் இதர சாதியினர் மட்டுமின்றி, வட மாநிலத்தவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ் லாமியர்களும் உள்ளனர். இத்தொகுதியில் திமுக, அதிமுக, தேமுதிக தமாகா - மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக என ஐந்துமுனைப் போட்டி உள்ளது.

எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

திமுக வேட்பாளரான வழக்கறிஞர் ப.தாயகம் கவி என்கிற சிவகுமார், அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து முதல்சுற்று வாக்கு சேகரிப்பை முடித்துள்ளார்.

குடிநீர் பிரச்சினை, சரிவர பராமரிக் கப்படாத மழைநீர் வடிகால், கொசு தொல் லையால் பரவும் நோய்கள், குவிந்து கிடக் கும் குப்பையால் ஏற்படும் சுகாதாரக்கேடு, குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், போதிய கழிப்பிட வசதிகள் இல்லாதது என மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இவர் வாக்கு சேகரிக்கிறார். தன்னை வெற்றிபெறச் செய்தால், இப் பிரச் சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்கிறார்.

‘வெள்ள பாதிப்பின்போது திமுகவினர் தான் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற் கொண்டனர். தற்போதைய அதிமுக எம்எல்ஏ நீலகண்டன் எந்த பணியும் செய்யவில்லை’ என்று குற்றம்சாட்டுகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு, பால்விலை ரூ.7 குறைப்பு, முதியோர் ஓய்வூதியம் அதிகரிப்பு, மாதம்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வசதி, ஆட்டோ வாங்கும்போது ரூ.10 ஆயிரம் மானியம் போன்ற சலுகைகள் கிடைக்கும் என்பதையும் மக்களிடம் நினைவூட்டுகிறார்.

நிரந்தர தீர்வுகள்

மக்கள் நலக் கூட்டணி சார்பில் இத் தொகுதியில் களம் காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி, பழைய வாழைமா நகரில் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் தேவி உள்ளிட்டோருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் கள், அடிப்படைப் பிரச்சினைகளை மக்க ளிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித் தார். ‘வெள்ள பாதிப்பின்போது ஆளுங் கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. மற்ற கட்சியினரைவிட கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் தீவிரமாக பணியாற்றினர்’ என்றும் கூறி வாக்குகள் சேகரிக்கிறார். குடிநீருடன் அடிக்கடி சாக்கடை நீர் கலப்பது இப்பகுதி யில் தீராத பிரச்சினையாக உள்ளது. தான் வெற்றி பெற்றால், இதற்கு நிரந்தர தீர்வு காண்பதாக அவர் உறுதிகூறி வருகிறார்.

இத்தொகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட் டங்களையும் சுகந்தி பட்டியலிட்டார். அப் போது நமது நிருபரிடம் சுகந்தி கூறும் போது, ‘‘திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை மக்கள் பார்க் கின்றனர். குறிப்பாக எங்கள் கூட்டணிக்கு இளைஞர்களிடம் அமோக ஆதரவு இருக் கிறது. அடிப்படைப் பிரச்சினைகளால் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ள இத்தொகுதி மக்கள் நிச்சயம் எங்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள்’’ என்றார்.

அதிமுக வேட்பாளர் வ.நீலகண்டன், நம்மாழ்வார்பேட்டை பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, இத் தொகுதியில் உள்ள 7 வார்டுகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைக் கூறி வாக்கு சேகரித்தார். முதல்வர் அறிவித்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், அறி விக்காமல் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை யும் பட்டியலிட்டார். ‘‘வெள்ள நிவாரணப் பணிகளை எம்எல்ஏவாகிய நான் செய்யவில்லை என குற்றம்சாட்டி மாற்றுக் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். அதுகுறித்து யாருடனும், எந்த இடத்திலும் விவாதிக்கத் தயார்’’ என்றார்.

பாமக வேட்பாளர் வழக்கறிஞர் தே.வனிதாமணி தனது ஆதரவாளர் களுடன் நேற்று கன்னிகாபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் செயல்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.

பாஜக கூட்டணி வேட்பாளராக இந்திய ஜனநாயகக் கட்சியை (ஐஜேகே) சேர்ந்த வழக்கறிஞர் கே.சந்திரசேகர் போட்டியிடுகிறார். அவரும் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x