பிரபல ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி சைலேந்திர பாபு

முன்மாதிரி ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரைக்கு டிஜிபி டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு
முன்மாதிரி ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரைக்கு டிஜிபி டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு
Updated on
1 min read

சென்னை: நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்குள் பயணிகளுக்கு வார இதழ்கள், ஸ்நாக்ஸ், வை-பை வசதிகள் தரும் முன்மாதிரி ஆட்டோ ஓட்டுநராக அறியப்படும் அண்ணாதுரையை நேரில் அழைத்து, டிஜிபி டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெயிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை - ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.

தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப்லட், சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். மேலும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுகிறார்.

ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை இன்று (27.1.2022) தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, இ.கா.ப., டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in