‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: ஆன்லைனில் ஞாயிறு காலை நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: ஆன்லைனில் ஞாயிறு காலை நடைபெறுகிறது
Updated on
1 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி வரும் ஞாயிறு காலை 10.30 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு.ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவு என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்றநிகழ்ச்சி இணையவழியில், வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்ட பெர்ஹாம்பூர் சப்-கலெக்டர் வி.கீர்த்திவாசன், ஐஏஎஸ், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி ப.கவுசல்யா, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கருத்துரையாற்ற உள்ளனர்.

போட்டித் தேர்வுக்கு தயாராவோர்

இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00224 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in