

வில்லியனூரில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும் பன்றிகளால் தொற்றுகாலத்தில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
புதுச்சேரி அடுத்த வில்லிய னூரில் கோகிலாம்பிகை உடனுறைதிருக்காமேஸ்வரர் கோயில் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து அலுவ லகம், காவல் நிலையம் போன் றவை அமைந்துள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வந்து செல்லும் சூழ்நிலையில், இப்பகுதிகளில் சர்வ சாதாரணமாக பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், “வில்லியனூர் காவல் நிலை யம் அருகில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைத்துள்ளனர். இப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் அங்கு கூட்டமாக தஞ்ச மடைந்துள்ளன. இங்கிருந்து வட் டாட்சியர் அலுவலகம், கோயில் என அப்பகுதி முழுக்க சுற்றித் திரிவதால் மக்கள் தொற்று காலத்தில் கடும் அச்சம் அடைந்துள்ளனர். அரசு இதை சரி செய்ய வேண்டும்” என்றனர்.