

திருமண விழாவுக்கு அழைப்பிதழ் வைத்து உறவினர்களை அழைப்பது போல் மதுரையில் 250 இளைஞர் கள் தேர்தல் திருவிழாவுக்காக அழைப்பிதழ் வழங்கி பொது மக்களை தேர்தல் நாளில் தவறாமல் வாக்களிக்க வருமாறு விநோத முறையில் அழைத்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களி டம் அவ்வளவாக இல்லை. தற் போது பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது என்பதிலும், தேர்தலில் வாக்குரிமையை தவறாமல் பயன் படுத்த வேண்டும் என்பதிலும் இளை ஞர்கள், பொதுமக்கள் ஓரளவு விழிப் புணர்வு பெறத் தொடங்கியுள்ளனர்.
மதுரையில் ‘மக்கள் பாதை மதுரை மாவட்டம்’ என்ற அமைப் பைச் சேர்ந்த 250 இளைஞர் குழுவினர் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி அவர்களை அழைப்பது போல், தேர்தல் திருவிழா என்ற தலைப்பில் அழைப்பிதழ்கள் அச்ச டித்து தேர்தல் நாளில் வாக்களிக்க தவறாமல் வருமாறு வீதி வீதியாக, வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். இவர்கள் வழங்கும் இந்த தேர்தல் திருவிழா அழைப்பிதழில் திருமண அழைப்பிதழில் இருப்பதுபோல் நாள், கிழமை, நேரம், இடம் குறிப் பிடப்பட்டுள்ளது.
உள்பக்கத்தில் நிகழும் மங்கள கரமான துர்முகி வருடம் வைகாசி 3-ம் தேதி (16.5.2016) திங்கட்கிழமை 100 சதவீதம் பதிவு யோகமும், 100 சதவீதம் நேர்மையுடனும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை எங்கள் வாக்கு விற்பனைக்கு இல்லை என்ற எண்ணத்தில் (லக்க னத்தில்), மேற்படி தேர்தல் திரு விழாவை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் நிச்சயிக்கப்பட்டு தேர்தல் திருவிழாவானது தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அனைத்து வாக் குச்சாவடிகளிலும் நடைபெற இருக் கிறது.
இந்த சமயம் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்கள் சுற்றம்சூழ வருகை தந்து விலைமதிப்பில்லாத தங்கள் வாக்கை மனசாட்சிப்படி பணம் வாங்காமல் பதிவு செய்து உதவு மாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கீழே அவ்வண்ணமே கோரும் இந்திய தேர்தல் ஆணையம் என் றும், கடைசி பக்கத்தில் நங்கள் நல்வரவை விரும்புவோர், வாக்குச் சாவடி மையத்துக்கு வர வேண்டிய வழித்தடம், வாக்குகளை பதிவு செய்ய எடுத்து வரவேண்டிய அடையாள அட்டைகளை அந்த அழைப்பிதழில் அச்சடித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஏ.சார்லஸ் செல்வராஜ் கூறும்போது, ‘‘குழந்தைகள் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் பெற்றோர்களுக்குப் பெருமை. 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந் தால் தமிழ்நாட்டுக்குப் பெருமை. இந்த நல்ல கருத்தை சாதாரண மாக சொன்னால் அது மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படு கிறது.
அதனால், இதுபோல் அழைப் பிதழ் அச்சடித்து தேர்தல் விழிப் புணர்வு செய்வதன் மூலம் சொல்ல வேண்டிய கருத்துகள் மக்களை எளிதாக சென்றடைகிறது. தற்போது முதற்கட்டமாக 10 ஆயிரம் அழைப் பிதழ்கள் அச்சடித்து வழங்கி யுள்ளோம்.
இந்த விழிப்புணர்வின் போது யாருக்கு வேண்டுமென் றாலும் ஓட்டு போடுங்கள், அதே நேரத்தில், வாக்குகளை நேர் மையாகவும், தவறாமலும் பதிவு செய்யுங்கள் என வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
குழந்தைகள் 100 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் பெற்றோர்களுக்குப் பெருமை. 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தால் தமிழ்நாட்டுக்குப் பெருமை.