Published : 13 Apr 2016 09:00 AM
Last Updated : 13 Apr 2016 09:00 AM
கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் தருமபுரி மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் தொடங்குவதற்கு முன்பே, மிடாஸ் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. சட்டமன்றத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என கூறிவிட்டு, தற்போது படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவேன் எனக் கூறுவது ஏமாற்று வேலை. பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர்கள் கூறியதை உள்வாங்கி வெளியிடப்பட்டதுதான் திமுக தேர்தல் அறிக்கையாகும். அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா மின் பொருட்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் 5 வருடத்திற்கு முன்பு கொடுத்த டிவி தற்போதும் நல்ல நிலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது’ என்று கனிமொழி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT