

சென்னை: மத்திய அரசு நிராகரித்த தமிழக அலங்கார ஊர்தி, சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் ஒய்யாரமாக ஊர்வலம் வந்தது.
நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பின்னர், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி உள்ளிட்ட பல்வேறு ஊர்திகளும் அணிவகுத்து வந்தன.
அது பற்றிய புகைப்பட தொகுப்பு இதோ:
முதல்வர் தொடங்கி வைக்கிறார்: டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க உருவாக்கப்பட்ட தமிழக ஊர்தி மத்திய அரசால் நிராகரிக்கப்பட நிலையில் அந்த ஊர்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த நிகழ்வை இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த ஊர்தி மூன்று ஊர்திகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. முதல் ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையும், மகாகவி பாரதியாரின் சிலை இன்னொரு ஊர்தியிலும், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய மூன்றாவது ஊர்தியும் முதல்வரால் கொடியசைத்து மாநிலம் தழுவிய பயணத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.