

சென்னை: சிறப்பாக பணிபுரிந்த தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது.
காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின் றன. அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் விருது பெற தமிழக காவல் துறை அதிகாரிகள் 20 பேர் தேர்வாகியுள்ளனர்.
தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவர் காவல் விருதுகள் சென்னை தலைமையிட ஏடிஜிபி வெங்கடராமன், தஞ்சாவூர் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் சிவனருள் ஆகியோருக்கு வழங்கப்படு கின்றன.
பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் தமிழக காவல் துறையில் 18 பேருக்கு வழங்கப்படுகின்றன. அவர்கள் விவரம்: தமிழக மத்திய மண்டல (திருச்சி) ஐ.ஜி. பாலகிருஷ் ணன், மேற்கு மண்டல (கோவை) ஐ.ஜி. சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், நெல்லை மாநகர காவல் ஆணையர் சரவணன், கியூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள், சென்னை போக்குவரத்து துணை ஆணையர் வி.கே.சுரேந்திரநாத், சிறப்பு காவல் பிரிவு (மணிமுத்தாறு) த.கார்த்திகேயன், கோவை போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் இளங்கோவன், சென்னை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப் புலனாய்வு துறை கூடுதல் கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகர், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன், கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் முருகவேல், கோவை மாநகர குற்றப் புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் முரளிதரன், சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகேசன், சென்னை கியூ பிரிவு ஆய் வாளர் அண்ணாதுரை, கடலூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை ஆய்வாளர் சண்முகம், ஈரோடு சிறப்பு இலக்குப் படை உதவி ஆய்வாளர் சிவகணேசன், திருச்சி நுண்ணறிவு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், சென்னை குற்றப் புலனாய்வு துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பசுபதி.