Published : 28 Apr 2016 08:31 AM
Last Updated : 28 Apr 2016 08:31 AM

விஜயகாந்துக்கு ரூ.53.5 கோடி சொத்து

விஜயகாந்த் தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் மொத்த சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 56 லட்சத்து 86 ஆயிரத்து 351 என்று தெரிவித்துள்ளார்.

அதில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.14 கோடியே 29 லட்சத்து 12 ஆயிரத்து 251 என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ. 38 கோடியே 77 லட்சத்து 74 ஆயிரம் 100 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிலுவையில் உள்ள வழக்குகள்: விஜயகாந்த் மீது மொத்தம் 30 வழக்குகள் மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதை வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனால் நேற்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பிற் பகல் ஒன்றரை மணியளவில் பிரச்சார வேனில் தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷுடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட் சியருமான முகுந்தனிடம் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, அமர்ந்திருந்த நிலையில் உறுதி மொழி வாசித்தார். 20 நிமிடம் வரை அங்கு இருந்த விஜயகாந்த், பின்னர் புறப்பட்டார்.

இப்போது எதுக்கு உறுதிமொழி?

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வேட்புமனு தாக்கல் செய்து முடித்து உறுதிமொழி ஏற்ற பின்னர், வட்டாட்சியரை பார்த்து, ''வேட்புமனு தாக்கல் செய்யும்போதே உறுதி ஏற்கச் சொல்கிறீர்கள். பின்னர் வேட்புமனு பரிசீலனையின் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்படுகிறது. அல்லது சிலர் வாபஸ் பெற்று விடுகின்றனர். எனவே ஒரேடியாக வேட்புமனு பரிசீலனைக்குப்பின், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் வேட்பாளர்களிடம் உறுதி மொழி ஏற்கச் செய்யலாமே'' என்று வேண்டுகோள் வைத்தார். அருகில் அமர்ந்திருந்த பிரேமலதா ஏதோ கூறியதும், சிரித்துக்கொண்டே அமைதியானார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x