

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினைச் சார்ந்தவர்கள், திமுக பிரமுகர் கேவிஎஸ்.சீனிவாசன் ஏற்பாட்டின் பேரில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில், காவேரிப்பட்டணம் பேரூராட்சி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், நாம் தமிழர் கட்சி பரமேஷ்,அதிமுக கிளை நிர்வாகிகள் சாதிக், மகேந்திரன், பாமக பூவரசன், விசிக சரோஜா, செல்வி, கவுரிசங்கரி, தினேஷ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தாங்கள் சார்ந்த கட்சியில் இருந்து விலகி, திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்தவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக பிரமுகரும், தொழிலதிபருமான கேவிஎஸ் சீனிவாசன், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, காவேரிப்பட்டணம் பேரூர் செயலாளர் பாபு, முன்னாள் பேரூர் செயலாளர் விவேகானந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் சென்னகேசவன், ராஜன், சாபுதின், பாபா மாதையன், தணிகாசலம், விஜயக்குமார், விஜயசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.