

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் கூட்டுறவுத்துறை மூலம் கால்நடை வளர்ப்புக்கு வட்டியில்லா நடைமுறை மூலதனக்கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். ப.வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 736 பேருக்கு ரூ.4.18 கோடி மதிப்பில் கூட்டுறவுத்துறை மூலம் கால்நடை வளர்ப்புக்கு வட்டியில்லா நடைமுறை மூலதனக்கடன் உதவிகளை வழங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:
மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கூட்டுறவு கடன் சங்கங்களும் விரைவில் ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளன. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று வதிலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடையச் செய்வதிலும் முதல்வர் உறுதியோடு உள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.