தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவது இந்தியர்களுக்கு தலைகுனிவு: விஜயகாந்த்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: "தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது" என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவர்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் படகுகளை தயார் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இலவசமாகவோ, அரசாங்கமோ படகுகளை வழங்கவில்லை. இந்த நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

இலங்கை அரசின் இந்த முடிவு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. குடியரசு தின விழா கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழர்களின் படகுகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in