Published : 10 Apr 2016 10:42 AM
Last Updated : 10 Apr 2016 10:42 AM

தஞ்சை வடசேரி கிராமத்தில் எரிசாராய ஆலைக்கு எதிரான போராட்ட நினைவு ஊர்வலம்

எரிசாராய ஆலைக்கு எதிரான போராட்டத்தின் நினைவாக 6-ம் ஆண்டு ‘கருப்பு நாள் ஊர்வலம்’ வடசேரி கிராமத்தில் நேற்று நடை பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் வடசேரி கிராமத்தில், தற்போதைய திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு குடும்பத்துக்கு சொந்த மான ‘கிங் கெமிக்கல்ஸ்’ ரசாயன தொழிற்சாலை இருந்தது. பின்னர், பூட்டப்பட்ட இந்த ஆலையில், அயல் நாட்டு மது வகைகள் தயா ரிப்புக்கான எரிசாராய வடிப்பு ஆலை தொடங்க முடிவுசெய்து, அதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் 9.4.2010 அன்று கிங் கெமிக்கல்ஸ் வளாகத்துக்குள் நடத்தப்பட்டது.

‘இந்த ஆலை அமைக்கப்பட் டால், ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கடும் பாதிப்புக் குள்ளாகும்.

ரசாயன கழிவு வெளியேற் றத்தால் சுற்றுச்சூழல், மக்களின் உடல் நலம் பாதிக்கப்படும்’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்த அக்கிராம மக்கள், கருத்துக்கேட்பு கூட்டத்தை ஊர் பொது இடத்தில் நடத்த வலியுறுத்தி, ஆலை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

அப்போது ஏற்பட்ட தகராறில், போலீஸார் மற்றும் அடியாட்களால் பொதுமக்கள் கடுமையான தாக்கு தலுக்கு உள்ளாகினர். பலர் காய மடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நாளை கருப்பு நாளாக ஆண்டுதோறும் வடசேரி கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, நேற்று கிராமத்தில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.

ஊராட்சித் தலைவர் எஸ்.கே.கண்ணதாசன் தலைமை யில், ஊடகவியலாளர் அய்யநாதன், திரைப்பட இயக்குநர் தமிழ்மணி, வழக்கறிஞர் மணிகண்டன் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வடக்குத் தெருவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கு கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x