Published : 28 Apr 2016 08:33 AM
Last Updated : 28 Apr 2016 08:33 AM

ஸ்டாலினுக்கு ரூ.5.84 கோடி சொத்து: சொந்த வாகனங்கள் எதுவும் இல்லை

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் தனக்கு ரூ. 5 கோடியே 84 லட்சத்து 2 ஆயிரத்து 963 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘‘தனக்கும், மனைவி துர்காவதி ஸ்டாலி னுக்கும் சேர்த்து ரூ. 1 கோடியே 11 லட்சத்து 59 ஆயிரத்து 79 மதிப்புள்ள அசையும் சொத் துக்கள், ரூ. 4 கோடியே 72 லட்சத்து 43 ஆயிரத்து 884 மதிப்புள்ள அசையா சொத் துக்கள் என மொத்தம் ரூ. 5 கோடியே 84 லட்சத்து 2 ஆயி ரத்து 963 மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக’’ தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு சொந்தமாக கார்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் இல்லை. ஸ்டாலி னிடம் ரூ. 50 ஆயிரம், மனைவி யிடம் ரூ. 25 ஆயிரம் கையிருப்பில் உள்ளது. துர்காவதி ஸ்டாலினிடம் ரூ. 15 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 720 கிராம் தங்க நகைகள் உள்ளன.

ஸ்டாலின் பொது சேவையில் இருப்பதாவும், மனைவி நிறுவன இயக்குநராக இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x