திமுகவின் ‘திருமங்கலம் பார்முலா’வை ‘தமிழ்நாடு பார்முலா’ ஆக்கியுள்ளது அதிமுக: இல.கணேசன் குற்றச்சாட்டு

திமுகவின் ‘திருமங்கலம் பார்முலா’வை ‘தமிழ்நாடு பார்முலா’ ஆக்கியுள்ளது அதிமுக: இல.கணேசன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கும்பகோணம் சவுராஷ்டிரா சபை யில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பாஜக கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி வேட் பாளர் பழ. அண்ணாமலை அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட் டத்தில் பங்கேற்ற பின்னர், இல.கணேசன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

வாக்காளர்களுக்கு கொடுப் பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம், கோடிக்கணக்கில் தேர்தல் ஆணைய அலுவலர்களால் பறி முதல் செய்யப்படும்போது, அது குறித்த வழக்கை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும். அதில் சம்மந்தப்பட்ட கட்சியையும், வேட் பாளரையும் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்துவதுடன், கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

அனைத்து வீடுகளுக்கும் பணம் என்ற திமுகவின் திருமங்கலம் பார்முலாவை, தமிழகம் முழுமைக்கும் விரிவுபடுத்தி தமிழ்நாடு பார்முலா ஆக்கியுள்ளது அதிமுக என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in