

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் பணியாற்ற நேற்று இளைஞர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி பருவத்தில் 650 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த கொள் முதல் நிலையங்களில் பணியாற்ற பருவகால அடிப்படையில், பட்டி யல் எழுத்தர், உதவியாளர், காவ லர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான ஆள் தேர்வு குறித்து ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட நிலையில், தற்போது பட்டியல் எழுத்தர் பணிக்கான நேர்முகத் தேர்வு தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 460 இளைஞர்கள் பங்கேற்றனர். நீண்டவரிசையில் காத்திருந்த இளைஞர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக அலு வலர்கள் கூறும்போது, ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 650 கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட உள்ளன. இதில், தற்போது 309 கொள் முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 2,18,784 டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற தேவையான பணியா ளர்களை தேர்வு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டு, 1,317 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள் ளது. நேர்முகத் தேர்வு ஜன.25 (இன்று), ஜன.27 ஆகிய நாட்க ளிலும் நடைபெற உள்ளது. இதில், தேர்வானவர்களுக்கு பின்னர் பணி நியமன ஆணை வழங்கப்படும்' என்றனர்.