மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும்போது கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றுக: திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்.
மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தும்போது கரோனா கட்டுப்பாடுகளை முமுமையாக பின்பற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுதையொட்டி, திமுவினருக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்:

''கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சனவரி 25-ஆம் நாள் - மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும்போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்டக் கழக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து, கழக மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் - முன்னோடிகள் - நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்'' என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in