Published : 11 Apr 2016 07:50 AM
Last Updated : 11 Apr 2016 07:50 AM

தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி தலைவர்கள் ஆவேசம்: நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் - மாமண்டூர் மாநாட்டில் விஜயகாந்த் உறுதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிபட தெரிவித்தார்.

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி தமாகா அணியின் தேர்தல் சிறப்பு மாநாடு செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் நேற்று நடந்தது.

இந்த மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய தாவது:

திமுகவுக்கு அதிமுக எதிரி, அதிமுகவுக்கு திமுக எதிரி, அவர்கள் இரண்டு பேருக்கும் நான் தான் எதிரி. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் தான் எதிரி. அவருடைய எண்ணங்கள் தான் அவருக்கு எதிரியாக உள்ளன.

டாஸ்மாக் கடைகளை படிப்படி யாக மூடுவேன் என்று ஜெயலலிதா சொல்கிறார். இதனைத்தான் நாங்களும் சொன்னோம். இதற்காக சசிபெருமாள் உயிரையே கொடுத் தார். நாங்கள் ரூ.1500 கோடி வாங்கியதாக சொல்கிறார்கள். என்னை பார்த்தால் அப்படிப்பட்ட ஆள் மாதிரியா தெரிகிறது. ஒரு பைசா கூட வாங்கிவில்லை. நாங்கள் நல்லாட்சி அமையவே இந்தக் கூட்டணியை உருவாக்கி யுள்ளோம். நல்லவர் லட்சியம், வெல்வது நிச்சயம். எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார் விஜயகாந்த்.

இந்த மாநாட்டில் தலைவர்கள் பேசியதாவது:

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):

அதிமுக, திமுக கட்சிகளைப்போல எங்கள் கூட்டணி யிடம் பணமில்லை. ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்த தொண்டர்களின் பலம் உள்ளது. 4 பேர் கொண்ட கூட்டணி எங்கே ஜெயிக்கப்போகிறது என்று சந்தேகப்பட்டனர். தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வந்ததும் எங்கள் வெற்றி 70 சதவீதம் உறுதியானது. தமாகா வந்ததும் அது 100 சதவீதம் உறுதியாகி விட்டது.

ஸ்டாலினும் சாதிக்பாட்சா வும் 4 முறை சந்தித்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. சாதிக்பாட்சாவை கொலை செய்து, அவரது வீட்டுக்கு உடலை கொண்டு சென்று, தூக்கு மாட்டினர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்வோம்.

ஜெயலலிதா, கருணாநிதியின் மதுவிலக்கு அறிவிப்பு ஊரை ஏமாற்றும் செயல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் கல்விக் கடனை அரசு வழங்கும். தொழில் தொடங்க 30 நாளில் உரிமம், ஊக வணிகத்தில் இருந்து வெளியே வருவோம், மும்முனை மின்சாரம் தடையில்லாமல் கொடுப் போம். பம்பு செட்களுக்கு ஒரு வாரத்தில் மின் இணைப்பு கொடுக்கப்படும்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக மகளிரணி தலைவர்):

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தமாகா அணி, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தப் போகிறது. தமிழகத்தில் லஞ்சம் ஊழலற்ற கூட்டணி ஆட்சியை எங்கள் அணி அமைக்கும். தமிழக முதல்வர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக கொண்டுவரப்படும் என்று அவர் பொய்யான வாக்குறுதி அளித்துள்ளார். எங்கள் இயக்கத்தி லிருந்து சென்றவர்கள், நாங்கள் அதிமுகவிடம் பணம் வாங்கிவிட்ட தாக சொல்கிறார்கள் விஜயகாந் துக்கும், எனக்கும் யாரிடமும் பணம் வாங்கி பழக்கமில்லை. கட்சி எனது கட்டுப்பாட்டில் உள்ள தாக சொல்கின்றனர். நான் எனது கணவர் விஜயகாந்தின் கட்டுப் பாட்டில் உள்ளபோது, கட்சி எப்படி எனது கட்டுப்பாட்டுக்கு வரும்?

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):

திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்து விட்டன. 2 திராவிட கட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஒரு வாய்ப்பை அளியுங்கள் நல்லாட்சி தருகிறோம். இதன் மூலம் ஒரு கட்சி ஆட்சி, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

எங்கள் அணி ஆட்சிக்கு வரும்போது ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டத்தை கொண்டு வருவோம். ஊழலற்ற, மதுவற்ற, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத ஆட்சியை அமைப்போம். விவசாயக்கடன் ரத்து செய்யப் படும். விவசாயிகளின் நலன் காக்கப்படும். ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்)

நாங்கள் 6 கட்சிகளைக் கொண்ட வலுவான அணியாக மாறியுள்ளோம். இதுவரை திமுக, அதிமுக என 2 கட்சிகள் மாறி, மாறி ஆட்சியில் இருந்ததால், ஊழல், கொள்ளைதான் அதிகரித் துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன், கல்விக் கடனைத் தள்ளுபடி செய்வோம். மதுவிலக்கு என்று ஜெயலலிதா வும், கருணாநிதியும் சொல்வது நம்பகத்தன்மையற்ற விஷய மாகும்.

திருமாவளவன் (விசிக தலைவர்):

தமிழகத்தில் ஒருவர் கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆன பின்பும், எதிர்க்கட்சி தலைவர் ஆக முடியாத நிலையில், தனது மகனை முதல்வராக்க துடிக்கிறார். ஆனால், தேமுதிகவை தொடங்கி 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலை வராக பொறுப்பேற்றார் விஜய காந்த். திரைத்துறையில் இருந்து வந்து முதல்வரான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இல்லாத ஒரு தகுதி விஜயகாந்துக்கு உள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்க விஜய காந்த் முன்வந்ததுதான் அது.

தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் வரவேற்புரை யாற்றினார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா நன்றியுரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x