Published : 24 Jan 2022 08:34 AM
Last Updated : 24 Jan 2022 08:34 AM

தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி மறைவுக்கு பிரதமர் மோடி தமிழில் அஞ்சலி ட்வீட் 

தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் திரு.ஆர்.நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை வரும் தலைமுறையினர் மறக்க மாட்டார்கள். வரலாறு & தொல்லியல் மீதான அவரது ஆர்வம் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் வேதனை அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

— Narendra Modi (@narendramodi) January 23, 2022

பத்ம பூஷண் விருது வென்றவர்:

பத்ம பூஷண் விருது பெற்ற தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி(91) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞர் இரா.நாகசாமி சம்ஸ்கிருத வித்துவானான ராமச்சந்திரனுக்கு மகனாக 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்தார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத மொழியில் முதுநிலைப் பட்டபடிப்பு முடித்தார். பின்னர், டெக்கான் கல்லூரியில் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த நாகசாமி, 1959-ம் ஆண்டு முதல் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலர், தமிழக அரசின் தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரி, தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசின் பத்ம பூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருதுகளைப் பெற்றுள்ள நாகசாமி, வயதுமூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். இவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x