Published : 24 Jan 2022 06:50 AM
Last Updated : 24 Jan 2022 06:50 AM

வெறிச்சோடிய சென்னை விமான நிலையம்: 2 பயணிகளுடன் இயங்கிய விமானம்

சென்னை: முழு ஊரடங்கால் பயணிகள் இல்லாமல் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது. சென்னையில் இருந்து கர்னூல் சென்றவிமானத்தில் 2 பேர் மட்டுமே பயணித்தனர்.

கரோனா தொற்று 3-வது அலைக்கு முன்பு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தினமும் 170-180 விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக இருந்தது.

3-வது அலைக்கு பிறகு, பயணிகள் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. நேற்று முழுஊரடங்கால் குறைவான அளவில்மட்டுமே விமான சேவை இருந்தது. பயணிகள் எண்ணிக்கையும் 12 ஆயிரமாக குறைந்தது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் 9 பயணிகள், மதுரை விமானத்தில் 12 பேர், திருச்சி விமானத்தில் 14 பேர், மைசூர் விமானத்தில் 16 பேர் மட்டுமே பயணம் செய்தனர். சென்னை - கர்னூல் விமானத்தில் 2 பயணிகள் மட்டுமே சென்றனர்.

சென்னையில் இருந்து கோவை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களில் பயணிகள்கூட்டம் வழக்கம்போல இருந்தது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x