

திருச்சி மாவட்டம் நாகமங்கலம் அருகே உள்ள பள்ளபட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
நாகமங்கலம் அருகேயுள்ள பள்ளபட்டியில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அங்குள்ள மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம்601 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்காக வீரர்கள் 300 பேர் சுழற்சிமுறையில் களமிறங்கினர்.
ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று மார்பில் உதைத்ததால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான சசிகில்பர்ட் (21)என்பவர் காயமடைந்தார். பின்னர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சசிகில்பர்ட் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.