Published : 27 Apr 2016 08:38 AM
Last Updated : 27 Apr 2016 08:38 AM

தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் கொடுக்கலாம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ல் நடைபெறுகிறது. அன்றைய தினம் தனியார் கடைகள் மற்றும் நிறு வனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை தரமணியில் உள்ள டைட்டல் பார்க் தொழில்நுட்ப பூங்காவில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா, இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், அனைத்து தகுதி யுள்ள வாக்காளர்களும் வாக்களிப்ப தன் அவசியம் குறித்து விளக்கினார்.

பின்னர் அவர் தலைமையில் டைட்டல் பார்க்கில் பணிபுரியும் மென் பொருள் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் இணை ஆணையர் எம்.ரவிசங்கர், துணை ஆணையர் உ.லட்சுமி காந்தன், டைட்டல் பார்க் மேலாண்மை இயக்குநர் சண்முக சுந்தரம், வணிக மேலாளர் என்.விஸ்வ நாதன் ஆகியோர் கலந்துகொண்ட னர். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார்களை அளிக்க ஏதுவாக மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை, தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில் உருவாக்கப்பட் டுள்ளது.

புகார் தெரிவிக்க: மாநில தொழிலா ளர் துணை ஆணையர் உ.லட்சுமி காந்தன் : 9445398801, 9445398695, 9445398694, 044-24335107. சென்னை (வடக்கு) தொழிலாளர் ஆய்வர் கிரிராஜன்: 9445398738. சென்னை (தெற்கு) தொழிலாளர் ஆய்வர் எஸ்.நீலகண்டன்: 9445398739. சென்னை (மத்தி) தொழிலாளர் ஆய்வர் ந.வாசுகி: 9445398740.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x