திருவந்திபுரத்தில் ஒரே நாளில் 80 திருமணங்கள்: சாலை, மண்டபங்களில் உறவினர்கள் குவிந்தனர்

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் முன்பு சாலையில் திருமணங்கள் நடந்தன.
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் முன்பு சாலையில் திருமணங்கள் நடந்தன.
Updated on
1 min read

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் முன்பு சாலையிலும், திருமண மண்ட பங்களிலும் 80-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.

தமிழகத்தில் கரோனா தடுப்புநடவடிக்கையாக நேற்று ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோயில்கள் மூடப்படும் என தமிழக அரசு உத் தரவிட்டுள்ளது.

இதனால் கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் நேற்று மூடப்பட்டு கோயில் முகப்பு பகுதிகளில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. முகூர்த்த நாள் என்பதால் நேற்று காலை முதல் மணமக்கள் ஜோடியாக திருவந்திபுரம் தேவநாத சுவாமிகோயில் முன்பு தங்கள் உறவினர்களுடன் திரண்டனர். பின்னர் சாலை யில் திருமணம் நடைபெற்றது.

அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல், முகக் கவசம் அணியாமல் திருமணத்தில் கலந்து கொண்டனர். அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களிலும் 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் கடலூர் திருப் பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீஸார் திருவந்திபுரம் கோயில் பகுதிக்கு சென்றனர்.

சாலையில் நடைபெறும் திருமணத்தின் போது அவர்கள் உறவினர்கள், பெற்றோர்கள் என 10 பேர் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நடைபெற வேண்டும் என்று எச்சரிக்கை செய்தனர்.

இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்டபங்களில் அரசுஅறிவித்த 50 பேர் மட்டுமே திருமணம் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என ஒலிப் பெருக்கி மூலம் தொடர்ந்து எச்ச ரிக்கை விடுத்து அறிவுறுத்தினர். முகக்கவசம் அணியாத 15 பேருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

போலீஸார் ஒலிப் பெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in