Published : 24 Jan 2022 09:26 AM
Last Updated : 24 Jan 2022 09:26 AM

பாதுகாப்பு கவசங்கள் இன்றி துப்புரவு பணி: அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் வேதனை

புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட பிரிவில் 13 துப்புரவு பணியாளர்கள் பணிபுகின்றனர். இவர்கள் புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள பெரிய வாய்க்கால், உப்பனாறு வாய்க்கால், வேல்ராம்பேட் வாய்க்கால் மற்றும் தேங்காய்த் திட்டு வாய்க்கால் ஆகிய கழிவுநீர் வாய்க்கால்களில் தூர்வாரி சுத்தப் படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு கையுறை, காலணி, முகக்கவசம் உள்ளிட்டபாதுகாப்பு கவசம் எதையும் பல ஆண்டுகளாக பொதுப்பணித் துறை நிர்வாகம் வழங்கவில்லை. பாதுகாப்பு கவசங்கள் எதுவும் அணியா மல் வெறும் கைகளால் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.

சாக்கடை கால்வாய்களில் பலநேரங்களில் மனித கழிவுகளும் மிதந்து வருகின்றன. அதையும்பொருட்படுத்தாமல் அகற்று கின்றனர். இதனால் இவர்களுக்குபடை, கால்களில் புண், பாதஎரிச்சல், தோல் நோய் உள்ளிட்டபல்வேறு தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

சிலருக்கு கை, கால்விரல்கள் இழப்பும் ஏற்படுகிறது. அதோடு, இந்த துப்புரவு பணியாளர்களை சார்ந்துள்ள குடும்பத் தினரும் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாகும் நிலை உருவாகி வருகிறது. இதன் காரணமாக துப்புரவு பணியாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மன உளைச் சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக துப்புரவு பணியாளர்கள் தரப்பில் கூறும் போது, ‘‘நாங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்க ளுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசங்களும், உபகரணங்களும் வழங்குவதில்லை.

இதுதொடர்பாக அதிகாரிகளி டம் முறையிட்டாலும் எந்தவித பதிலும் சொல்வதில்லை. மழை வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தவறாமல் உழைக்கின்றோம். தற்போது இந்த கரோனா பெருந்தொற்று காலத்திலும் வேலைபார்த்து வருகிறோம்.

பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டிவருவது மிகுந்த மன உளைச்சலைஏற்படுத்துகிறது. பாதுகாப்பு கவசங் களையும், உபகரணங்களையும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x