Published : 08 Apr 2016 09:01 AM
Last Updated : 08 Apr 2016 09:01 AM

தமிழக தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழக தேர்தல் ஆணையம் நடு நிலையோடு செயல்படவில்லை என கிருஷ்ணகிரியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

கிருஷ்ணகிரியில் நேற்று பாமக சார்பில், ‘உங்கள் ஊர், உங்கள் அன்புமணி’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், விவசாயி கள், கல்லூரி மாணவ, மாணவிகள், வணிகர்கள், இளைஞர்கள், தொழி லாளர்கள், மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம் கிருஷ்ணகிரியாகும். தமிழகத்தில் ரயில் நிலையம் இல்லாத ஒரே மாவட்ட தலைநகரம் கிருஷ்ணகிரி. 50 ஆண்டுகளாக அதிமுக, திமுக கட்சிகளால், இப்பகுதி மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

இந்தியாவிலேயே மதுவால் அதிக வருமானம் கிடைக்கும் மாநிலம் தமிழகம்தான். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாமக மலரப் போகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் 2,434 விவ சாயிகள் தற்கொலை செய்துள்ளார் கள். விவசாயிகளின் நலன் இந்த ஆட்சியில் காக்கப்படவில்லை. பாமக ஆட்சிக்கு வந்ததும், விவ சாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்படும். வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, நீர் மேலாண்மைத் துறை களுக்கு தனித்தனி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். நெல், கரும்புக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.

கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரி, படேதலாவ் ஏரி திட்டம், ரயில் கொண்டு வர நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அன்புமணி கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘தமிழக தேர்தல் ஆணை யம் நடுநிலையுடன் செயல்பட வில்லை. அரசு கேபிள் டிவி தலைவர் ராதாகிருஷ்ணன் உடு மலைப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து கேபிள் டி.வி. தலைவராக பணியாற்றி வருகிறார்.

அதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் எங்களின் திட்டங்களைப் பற்றி மட்டும்தான் பேசுகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x